Welcome to Tamilwebradio
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறது:வினோநோகராதலிங்கம்
![]() |
வீரகேசரி - எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆயுதக் கொள்வனவுக்காக இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ரஷ்யா
ஆயுதத் தளபாடங்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்தி டப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.
"ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ரத்துச் செய்வதுகுறித்து முறையான தீர்மானம் எடுக்கப்படவில்லை''-ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர்
ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்
வீரகேசரி - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்
வீரகேசரி-இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Last Updated (Saturday, 06 February 2010 17:55)
வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது தவறிழைத்தால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் திருகோணமலையில் சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு
(வீரகேசரி) - ஜனாதிபதித் தேர்தலானது தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து த.தே.கூ மன்னாரில் பிரசாரக் கூட்டம்
(வீரகேசரி ) ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
Last Updated (Saturday, 23 January 2010 00:14)
இனவாதத்தை தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றிபெற அரசாங்கம் முயற்சி
(வீரகேசரி) இன ஐக்கியத்தை சீர்குலைத்து இனவாதத்தை தூண்டி விட்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற தற்போதைய அரசாங்கம் முயற்சி செய்கின்றது. ஆனால், சகல இனங்களுடனான எமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறை கலாசாரத்தினால் தடுத்துவிட முடியாது என்று எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அரசியல் வாதி என்பதை விட என்னை ஒரு நடிகனாக சித்திரிக்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் விரும்புகின்றது இனவாதத்தை... எனவும் அவர் கூறினார். Last Updated (Friday, 15 January 2010 20:54)
ஜெனரல் பொன்சேகாவின் வெற்றி ஜீ.எஸ்.பி சலுகைக்கு வழிவகுக்கும்-ரணில்
எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் ஜனநாயக உரிமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பாதுகாக்காவிடின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை எமது நாட்டுக்குக் கிடைக்காது போய் விடும். எனவே, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ள ஜெனரல் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மரண அறிவித்தல் .....
நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனி IDAR-OBERSTEINஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வனஜா ஜெயப்பிரகாசம் அவர்கள் 06.12.09 அன்று காலமானார்.
Last Updated (Thursday, 10 December 2009 12:30)
டென்மார்க்கில் ஐ.நாவின் உலக காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு
ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது வாரத்தில் பெருந்தொகையான உலகத் தலைவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.
|









வீரகேசரி - இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முறையான தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதற்கு இம்மாத இறுதிவரை அவகாசம் உள்ளது எனவும் பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் லக்ஸம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்














